நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்து மனு அளித்தார் .
அந்த மனுவில் , ‘அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் வரக்கூடிய நோயாளிகளை காத்திருக்க வைக்காமல் , அவர்களுக்கு ’பெட்’ கிடைக்கிற வரை சிலிண்டர் கொண்ட பேருந்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனோ தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்புவர்களை ஒரு வார காலம் பள்ளி, கல்லூரிகளில் தனிமையில் வைத்து பாதுகாக்க வேண்டும் . அதற்கான உணவு தேவைகளை நாங்களே செய்து தருகிறோம். நெல்லை மாவட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கு ஆக்சிசன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.









