நடமாடும் டாஸ்மாக் கடை நடத்தியவர் கைது

0
954

ஒரு காலத்தில் வீட்டுக்கு சென்று மது பாட்டில் விநியோகிக்க அரசு திட்டமிட்டது. ரேஷனுக்கே தேடித்தான் போகிறோம், மதுவை தேடிச்சென்று கொடுப்பதா என்று கேள்வி எழுந்ததால் அது நடக்கவில்லை. அந்த லட்சியத்தை இந்த நெருக்கடி காலத்தில் நிறைவேற்ற முயன்ற ஒருவர் தூத்துக்குடியில் கைதாகியுள்ளார்.

ஊரடங்கை முன்னிட்டு நடமாடும் காய்கறிக் கடைகளை அரசு இயக்குகிறது. குடிமக்கள் சோகத்தை போக்க தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (30) காரில் மதுப்புட்டிகளை வைத்து குடிமக்களுக்கு விநியோகித்துக்கொண்டிருந்தார். சப் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படை அவரை கைது செய்து, 165 மதுப்பாட்டில்களையும் காரையும் பறிமுதல் செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here