இளையான்குடி அருகே மனைவியை தவறாக பேசிய தந்தையை வெட்டிக் கொலை செய்த இரு மகன்கள் கைது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சனிக்கிழமை நள்ளிரவு தனது மனைவியை மதுபோதையில் தவறாக பேசிய தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த இரு மகன்களை போலீசார் கைது செய்தனர்.
இளையான்குடி அருகே சிறுபாலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கணேசன்(57), இவர் அடிக்கடி மது போதையில் வீட்டிற்கு வந்து அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல் மது அருந்திவிட்டு இரவு வீட்டுக்கு வந்த கணேசன் தனது மகன் பழனிச்சாமியின் மனைவியிடம் தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணேசனின் இளைய மகன் பழனிச்சாமி(26) மற்றொரு மகன் கார்த்திகைசாமி இருவரும் சேர்ந்து கணேசனை அரிவாளால் கழுத்தில் வெட்டிக் கொலை செய்தனர்.
இளையான்குடி போலீசார் இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து கார்த்திகைசாமி, பழனிச்சாமி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.