தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மதன் (37) என்பவர் இன்று மதியம் அப்பகுதியில் உள்ள அவரது வயலில் இருந்த மாடுகளை விரட்டிய போது இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.









