இஸ்ரோ தலைவருக்கு கலாம் விருது

0
1189

சென்னை தலைமை செயலகத்தில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு, டாக்டர் அப்துல் கலாம் விருது மற்றும் சான்றிதழை தமிழக முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் கன்யாகுமரியில் உள்ள சரக்கல்விளை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தார். இவர் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்றார். சுய முயற்சியுடன் கடுமையாக உழைப்பவர். குடும்பத்தினரின் வழிகாட்டுதலின்றி சுயமாக படித்தார்.

எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் சென்றதில்லை. இருந்தும் இவர்தான் குடும்பத்தில் முதல் பட்டதாரி. விண்வெளித் துறையை சார்ந்த விஞ்ஞானியான இவர் தற்போது ஏ எஸ் கிரண் குமார் ஓய்வு பெற்றதை இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஐம்பதாண்டு பழமையான இஸ்ரோ நிறுவனத்தின் ஒன்பதாவது தலைவரான நிலையில் சிவனுக்கு, டாக்டர் அப்துல் கலாம் விருது மற்றும் சான்றிதழை தமிழக முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here