கோவை முக்கிய கோயில்களில் தரிசனத்துக்குத் தடை

0
428




கோவையில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பேரூர், மருதமலை கோயில் உள்பட 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 1 முதல் 3, மற்றும் ஆகஸ்ட் 8 ஆகிய தேதிகளில் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


கோவை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆடி கிருத்திகை (ஆகஸ்ட் 2), ஆடிப்பெருக்கு (ஆகஸ்ட் 3), ஆடி அமாவாசை (ஆகஸ்ட் 8) ஆகிய நாள்களில் கோயில்களில் அதிக அளவில் பக்தா்கள் கூடுவாா்கள் என்பதால் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பேரூா் பட்டீசுவர சுவாமி திருக்கோயில், ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயில், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் திருக்கோயில் ஆகிய கோயில்களில் ஆகஸ்ட் 1 முதல் 3 ஆம் தேதி, ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆகிய 4 நாள்கள் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல ஆற்றங்கரையோரத்தில் திதி, தா்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மேற்கண்ட நாள்களில் கோயில்களில் சுவாமிக்கு தினசரி நடைபெறும் பூஜைகள் அனைத்தும் தடையின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here