சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்

0
598

சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது என நீதிபதிகள் அதிரடி கேள்வி எழுப்பினர். தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது. வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்கு இந்திய சட்டத்தை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

“சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம்” கொண்டு வரப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கு அக்டோபர் 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here