கொள்முதல் செய்த பயறுக்கு பணம் தர இழுத்தடிக்கும் நிறுவனத்தால் தந்தையை இழந்து தவிக்கும் மகன்

0
500

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பகுதியில் உள்ள விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 1000க்கும் மேற்பட்ட விசாயிகள் உறுப்பினர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் நிர்வாக மேலாளராக சுப்புராஜ் என்பவரும், இயக்குநர்களாக கந்தசாமி, நவநீதன், ராமமூர்த்தி உள்ளிட்ட சிலரும் இயக்குநர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்யும் உளுந்து, பாசி உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்து அதiனை தரம்பிரித்து, பட்டை திட்டி வெளியில் விற்பனை செய்து வருகின்றனர்.

கடம்பூர் அருகேயுள்ள மலைப்பட்டி கிராமத்தினை சேர்ந்த குருசாமி மற்றும் அவரது மகன் ராஜகோபால் நடத்தும் எம்.ஜி.குருசாமி காட்டன் டிரர்டர்ஸ்; என்ற நிறுவனத்தில் இருந்து மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தினர் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஆண்டு அக்டோபார் மாதம் வரை ரூ 42 லட்ச ரூபாய் வரை உளுந்து கொள்முதல் செய்துள்ளனர். இதில் சுமார் 20 லட்சம் வரை பல்வேறு கட்டங்களாக பணம் வழங்கியுள்ளனர். இன்னும் மீதி 21 லட்சம் வரை பணம் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து பலமுறை குருசாமி மற்றும் அவரது மகன் ராஜகோபால் இருவரும் மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் மற்றும் அவர்களிடம் கொள்முதல் செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர் கந்தசாமியிடம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தரமால் பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

குருசாமி மற்றும் அவரது மகன் ராஜகோபால் இருவரும் தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்த உளுந்தினை தான் மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு கொடுத்து இருந்தனர். அதனால் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தனர்.

தங்களிடம் கொள்முதல் செய்த உளுந்துக்கு பணம் தர வலியுறுத்தி விவசாயிகளும் நெருக்கடி கொடுக்க தொடங்கினர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் வயது முதிர்வு காரணமாக குருசாமி கடந்த மே மாதம் இறந்து விட்டார். தந்தை இறந்து விட தற்பொழுது அவரது மகன் ராஜகோபால் தங்களின் பணத்தினை கேட்டு நடைநடையாக நடந்து வருகிறார்.

இதற்கிடையில் மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தினர் விவசாயி ராஜகோபாலுக்கு பணம் தரமால் இருப்பதை கண்டித்தும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியின் துணை தலைவர் அய்யலுச்சாமி தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு உளுந்தினை தலையில் சுமந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பிரச்சினை தொடர்பாக மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கந்தசாமியிடம் கேட்ட போது கொரோனா ஊரடங்கு, மழையினால் பாதிப்பு மற்றும் நிர்வாக ரீதியாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பணம் தர காலதாமதம் ஏற்பட்டதாகவும், இது குறித்து மற்ற நிர்வாகிகளிடம் பேசி பணத்தினை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விற்பனை செய்த பொருளுக்கு பணம் கிடைக்கமாலும், விவசாயிகளுக்கு பதில் சொல்ல முடியமாலும், தந்தையை பறிகொடுத்த நிலையில், பணம் வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருக்கும் ராஜகோபால் பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here