த. நா. சட்டப்பேரவையில் முதன்முறையாக இ-பட்ஜெட் தாக்கல்

0
767

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசின் முழு பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.. வேளாண்மைகான தனி பட்ஜெட்டும் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது..

இ- பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை செயலகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது .சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் மேஜை முன்பாக டெல் நிறுவனத்தின் பெரிய அளவில் டாப் வைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

இனிவரும் காலங்களில் சட்டமன்ற கூட்டத்தொடர் காகிதமில்ல கூட்டத்தொடராக இருக்கும் என்பதால் அதற்கான ஆய்வுகூட்டம் கடந்த மாதம் சபாநாயகர் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் , அமைச்சர் க்கள்,சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு நிதிநிலை அறிக்கை மற்றும் துறை ரீதியான மானியக் கோரிக்கையின் போது புத்தகமாக அச்சிட்டு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. இதை தவிர்ப்பதற்காக தான் இ-பட்ஜெட் முறையை கொண்டு வர ப்படும் என முடிவு செய்யப்பட்டது, இ-பட்ஜெட் மூலம் காகிதம் மிச்சம் படுத்துவது மட்டுமல்லாமல் மரங்களை பாதுகாக்கலாம் என நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் .பழனிவேல்ராஜன் செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.

வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை அறிக்கை வாசிக்கும் போது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் டாப் மூலம் நிதிநிலை அறிக்கையை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

காகிதமில்லாத பேரவை அமையப் பெற்றாலும், சட்டப் பேரவை விவாதங்களை பொது மக்கள் வரிக்கு வரி முழுமையாகத் தெரிந்து கொள்ள நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த 5நிமிடத்திற்கு பிறகு புத்தங்களும் வழங்கப்படும் என்று சட்டப்பேரவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here