தலைமை செயலக வளாகத்துக்குள் அடிக்கடி பாம்புகள் வருவதுண்டு. அந்தவகையில், தலைமை செயலகத்தை சுற்றிலும் நிறைய மரங்கள், புதர்கள் உள்ளதால் இப்படி பாம்புகள் அடிக்கடி படையெடுத்து வருவது வாடிக்கையாகி விட்டது. பாம்புகள் தலைமைச்செயலகத்தில் நுழைந்து விடுவதால் தலைமை செயலக ஊழியர்களிடையே அடிக்கடி பரபரப்பும், பீதியும் ஏற்பட்டு விடும்.
அந்தவகையில், இன்று தலைமை செயலக வளாகத்தின் 4-வது நுழைவாயிலில் படமெடுத்தபடி ஒரு நல்ல பாம்பு கிடந்ததை கண்டதும், ஊழியர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த நல்ல பாம்பு அங்குள்ள புதருக்குள் நுழைந்துவிட்டதால், அதனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.