தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சாலீ எஸ் நாயரை வங்கி நியமித்துள்ளது. தொடர்ந்து பணி நியமனம் செய்யப்பட்டுள்ள அவர் விரைவில் பொறுப்பேற்பார் என கூறியுள்ளார். இவர் பல்வேறு பெரு நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.







