வேலூர் சைதாப்பேட்டை மலை பகுதியில் மண்ணில் புதைந்திருந்த பழங்கால பீரங்கி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறி அப்பகுதி பொது மக்கள் ஆர்வமாக சென்று பார்த்துவந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து பின்னர்வனத் துறைக்கும், தொல்லியல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
பீரங்கி அதிக பளுவாக உள்ளதால் மலைப் பகுதியில் இருந்து எடுத்துவருவது சிரமம் என்பதால் தற்போதுவரை அங்கேயே உள்ளது. வனத்துறை முடிவுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட பீரங்கா வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்படும் என கூறப்படௌடுள்ளது.
மேலும் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி 1800-க்கு முந்தைய ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்தது என்றும்.சைதாப்பேட்டை மலை மீது உள்ள ராணிகோட்டை, கண்காணிப்பு மையத்தில் இருந்து கீழே விழுந்திருக்காலம் என கூறப்படுகிறது.














