ஜோலார்பேட்டை அருகே குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி 7பேர் படுகாயம்

0
1155

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த நாகமங்கம் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் மோகன் (31) இவர் இன்று காலை எட்டு மணி அளவில் வெளிமாநிலத்தில் இருந்து பர்கூரில் அமைந்துள்ள சிப்காட் கம்பெனிக்கு ஜோலார்பேட்டைக்கு ரயிலில் வந்த வெளிமாநில ஆட்களை அழைத்து வர பருகூரிலிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அதன்பின் வெளிமாநில ஆட்களை அழைத்துக்கொண்டு பர்கூருக்கு செல்லும்போது ஜோலார்பேட்டை நகராட்சிக்கு அருகே உள்ள மங்கம்மாகுளம் பகுதியில் திடீரென ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் ஆட்டோவை ஓட்டி வந்த மோகன் சம்பவ இடத்திலேயே பலியானார் பின்னால் அமர்ந்திருந்த இருந்த 7 வெளி மாநிலத்தவரும் படுகாயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அக்கம்பக்கத்தினர் மீட்டு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் அறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here