அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலாவை அதிமுகவை பாதுகாக்க வருமாறு தொண்டர் அழைப்பதும், நிச்சயம் வந்து கட்சியை பாதுகாப்பேன் என்று அவர் சொல்வதுமான ஆடியோ பதிவுக்கு விளக்கம் அளித்தார்.
’அதிமுகவுக்கு சசிகலா வரவேண்டும் என்று தொண்டர் ஒருவர் கூட விரும்பவில்லை. சசிகலா பேசுவதாக வந்த ஆடியோ அவராலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரே அதில் தொண்டர் ஒருவரை அழைத்துப் பேசுகிறார். அவரும் அமமுக தொண்டர் தான். அதிமுக நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது’ என்று அவர் கூறினார்.














