சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சி நிலையம் நடத்திய கெபிராஜ் அப்பகுதி பள்ளி ஒன்றில் கராத்தே பயிற்சியாளராகவும் இருந்தார். அங்கு கராத்தே பயின்ற பெண்ணிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. நாமக்கலில் நடந்த கராத்தே போட்டிக்கு சென்ற போது தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒரு பெண் சமூக வலைத்தளம் மூலம்மாக புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் நேற்று முதல் அவரிடம் அண்னாநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், தண்டனை சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிவு 370, 511, 506, 354 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது நண்பர்களும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.














