நாங்குநேரி தொகுதி தேர்தல் பணிக்காக மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலத்தில் பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 20க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வீடு புகுந்து பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் சிதறிக்கிடந்த ரூ.2,78,000ஐ கைப்பற்றினர். இது குறித்து தேர்தல் பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. சரவணகுமார் உட்பட 7 பேர் மீது முறைகேடாக பணம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே போல், எம்.எல்.ஏ. அளித்த புகாரின் அடிப்படையில் அவர்களை தாக்கி பணம், செல்போன் பறித்ததாக அந்த பகுதி மக்கள் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.












