உத்தர பிரதேசத்தில் ஆயுஷ்மான் பாரத் திவாஸ் திட்டத்தின் ஒரு வருட நிறைவை குறிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பேசியபோது, ‘அரசு மருத்துவ கல்லூரிகளில் படித்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்கள், மேல்படிப்புக்கு செல்லவில்லை என்றால் அவர்கள் கிராமங்களில் 2 வருடங்கள் பணிபுரிய வேண்டும். எம்.டி., எம்.எஸ். படிப்பவர்களும் கிராமப்புற பகுதிகளில் ஒரு வருடம் வரை பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.














