தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

0
628

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here