வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அறை – பத்திரிகையாளர்கள் கோரிக்கை

0
1165

நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிககையாளர்கள்,ஊடகவியலாளர்களில் மாவட்ட அளவில் இயங்கும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே அரசின் சலுகைகளை பெற்று வருகின்றனர். அவர்களைப் போலவே தினமும் முழு நேரம் தாலுகா அளவில் இயங்கி வரும் பத்திரிகையாளர்களுக்கு எவ்வித சலுகையும் கிடைப்பதில்லை.

மேலும், உடனடி செய்திகளை சேகரிக்கவும், அவசரமாக அவற்றை பத்திரிகை ஊடக அலுவலகங்களுக்கு அனுப்பவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பெரும்பாலும் பத்திரிகையாளர்களுக்கு அறை ஒதுக்கப்படுகிறது. வட்ட அளவில் இயங்கும் பத்திரிகையாளர்களுக்கு அந்த வசதி தரப்படுவதில்லை. முதன்முறையாக அந்த கோரிக்கையை சாத்தான்குளம் பத்திரிகையாளர்கள் எழுப்பியுள்ளனர்.

சாத்தான்குளம் வட்டார பத்திரிகையாளர்கள் மன்ற ஆலோசனை கூட்டம் இன்று மாலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் முத்துவேல், சட்ட ஆலோசகர் வேணுகோபால் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், வட்டார செய்தி சேகரிப்பாளர்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், தாலுகா அலுவலக செய்திகளை உடனுக்குடன் வழங்கிட வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி செய்தி தொடர்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும், செய்தியாளர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும், செய்தியாளர் நல வாரியத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. . இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here