தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (47) என்பவர் காங்கிரஸ் பிரமுகராக உள்ளார். இவர் வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் அவரது தாயார் வேம்படிபேச்சி (65)யிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரது தாயிடம் 500 ரூபாய் பணம் கேட்ட போது தாய் வேம்படிபேச்சி பணம் கொடுக்காததால் ராதாகிருஷ்ணன் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிந்து ராதாகிருஷ்ணனை ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.









