வேலை இல்லாத விரக்தி: சி என் சி ஆப்பரேட்டர் தற்கொலை

0
411


கோவை சுந்தராபுரம் அடுத்த அஷ்டலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஆனந்தன் (31). இவர் சிஎன்சி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டாக சரியான வேலை இல்லாமல் தவித்து வந்தார் .இதனால் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகையை கூட செலுத்த முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் மனைவி ஶ்ரீதேவி மற்றும் குழந்தைகளை தனது பாட்டி வீட்டில் கொண்டு சென்று விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

மனம் உடைந்த நிலையில் இருந்த ஆனந்த் வீட்டில தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் அவரது சகோதரரின் மகன் வீட்டிற்கு வந்துள்ளார் .வீட்டின் கதவை தட்டியபோது திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது ஆனந்த் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் இதுகுறித்து போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here