நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன இவற்றின்்
மூல.ம்
இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடந்து வந்தது.
இந்நிலையில் இரண்டாவது அணு உலையில் இன்று மாலை சுமார் 5.30 மணிக்கு தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர் . முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி நடந்து வருகிறது. இரண்டாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக தமிழகத்திற்கு கிடைக்கும் சுமார் 500 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் இரண்டாவது அணு உலை மின்சார உற்பத்தியை தொடங்கும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது.













