‘கிக்’குக்காக தொடங்கி ‘பைக்’குக்காக தொடர்ந்த மது திருட்டு

0
642

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகளும் கொரோனா ஊரடங்குக்காக மூடப்பட்ட நிலையில், கடந்த 8ஆம் தேதி,ராணிப்பேட்டை மாவட்டம் தென்னந்தியலம் கிராம டாஸ்மாக் கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு ரூபாய் ஒன்ற ரை லட்சம் மதிப்பிலான உயர்ரக மதுபான பாட்டில்கள் திருடப்பட்டன.

இரு தனிப்படை அமைத்து திருடிய வர்களை தேடிய நிலையில் நேற்று இரவு ரத்தினகிரி யை அடுத்த பூட்டுத்தாக்கு அருகே இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தவர் சிக்கினார்.

விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் வசூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(46) என்பதும்,

வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இவரது உறவினர்களும்,aராணிப்பேட்டை மாவட்டம் கலவை முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளுமான சந்தானம்(26) ராம்தாஸ்(21) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

பலே திருடனான மணிகண்டன், உறவினர்களான சந்தானம் ராமதாஸ் ஆகியோரின் போதை ஆர்வத்தை பயன்படுத்தி அவர்களை மதுக்கடைகளை துளையிட பயன்படுத்தினார். முதலில் போதைக்காக திருட தொடங்கிய சகோதரர்கள் அதில் நல்ல பணம் கிடைத்ததும், பணத்துக்காக திருடுபவர்கள் ஆக மாறி விட்டனர்.

இதற்கு முன்பும் 3 டாஸ்மாக் கடைகளில் அவர்கள் திருடியுள்ளனர் அதில் புதிதாக ஒரு சொகுசு பைக்கும் வாங்கியுள்ளனர். தொழிலில் டெவலப் ஆகி வந்த சமயத்தில் போலீசாரிடம் மாட்டிக் கொண்டனர்.

மூவரையும் கைது செய்த போலீசார் மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து செல்வதற்கு உதவியாக இருந்த மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here