வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் அருகே உள்ள தனியார் பல்தொழில்நுட்ப கல்லூரியை ஒட்டி விழுப்புரம் – மங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக கழிவுநீர் கால்வாயில் ஒரு குழந்தை எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக வேலூர் தாலுகா காவல்துறையினருக்கு அப்பகுதியை கடந்த சென்றவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆனது தெரிய வந்துள்ளது. குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
விரும்பாத பிரசவமே குழந்தை கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றாலும் தொடரும் விசாரணையில் தான் அது தெரிய வரும் என காவல்துறையினர் கூறினர் .