தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள திருப்பணிக்கரிசல் குளம் வாழைத்தோட்டத்தில் வித்தியாசமான கால் தடத்தை கண்ட விவசாயிகள் அதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து பார்த்து அது முதலையின் கால் தடம் என்று உறுதி செய்தனர்.
அந்த தடம் ஆறுமுகமங்கலம் குளத்துக்கு சென்றதால் அங்கு முதலை இருக்க வாய்ப்புள்ளதாக கருதி வருவாய் துறையினர் குளக்கரையில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். வனத்துறையினர் முதலையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.









