நேற்று முன்தினம் செக்காரக்குடியில் இருந்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சென்று திரும்பிய போது நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியான சோக சம்பவம் நடந்தது.
அந்த விபத்தில் பலியான 17 வயதே ஆன .வடிவேலு என்ற சிறுவன் தனது கண்களை தானம் செய்துள்ளான். தங்கள் குழந்தையை இழந்த சோகமான நிலையிலும் தங்கள் மகன் வாயிலாக பிறருக்கு பார்வை கிடைக்கட்டும் என தனது மகன் கண்களை தானம் செய்ய சம்மதித்த பெற்றோர் ஆதிமூலம் – பேச்சியம்மாளை உற்றாரும் ஊராரும் பாராட்டினர்.








