ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய, பாகிஸ்தான் ராணுவத்துக்கிடையே தாக்குதல் நடக்கிறது. எல்லை தாண்டி வந்து தாக்கியதால் பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
தளபதி பிபின் ராவத் 6 முதல் 10 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகியிருப்பதாகவும், 3 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறினார். பாகிஸ்தான் தரப்பில், இந்திய வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்னமும் அப்பகுதியில் பதற்றம் தொடர்கிறது.














