முதியோருக்கு உதவி தேவையா?

0
1664

தமிழக அரசு இரண்டாம் அலை கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

’இச்சமயத்தில் வயது முதிர்ந்த, மூத்தகுடி மக்களுக்கு மருத்துவ உதவிகளோ அல்லது வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை எண்ணான  044-2723 9200, 2723 6111 என்ற எண்ணில் தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் மூலம் அவர்கள் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள் .

ஊரடங்கின் போது பொது மக்கள் முக கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடித்து, வீட்டிலேயே இருங்கள்’ என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கேட்டுகொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here