ஐ.நா பொதுக்குழுவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி ஐ.நா. சாசனம், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் படி காஷ்மீர் விவகாரம் அமைதியாகவும் முறையாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறும்போது:-
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும், இப்பகுதி தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் நாட்டுக்கு உள்ளார்ந்தவை என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை சீனத் தரப்பு நன்கு அறிந்திருக்கிறது.
மற்ற நாடுகள் இந்தியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டவிரோதமாக சீனா, பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரம் என்று அழைக்கப்படுபவை மூலம் நிலைமையை மாற்றுவதற்கான முயற்சிகளில் இருந்து விலகுவோம் என கூறினார்.