உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி அது தொடர்பான வழக்குகளும் விரைவுபடுத்தப்படுகின்றன. ஆதி திராவிடர்கள், பழங்கிடுயினருக்கான வார்டுகளில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதம் மாறிய எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் போட்டியிட தடை விதிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அதை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்றும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அதுகுறித்து முடிவெடுப்பார் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.