தமிழகம் முழுவதும் இன்றிலிருந்து 7 நாட்கள் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு மதுரை முக்கிய நகர்ப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிடும் விதமாக
மாநகராட்சியின் சார்பாக 15 நடமாடும் காய்கறி விற்பனை கடையை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் இயக்கிவைத்தார்.
இந்த வாகனத்தில் விற்கப்படும் காய்கறி பையின் தொகுப்பில் கத்தரி,வெண்டை,அவரை வெங்காயம்,தக்காளி, தேங்காய் உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கியுள்ளன., இது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வாகனம் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்ய உள்ளது. முதல்கட்டமாக 15 வாகனங்கள் இன்று மதுரை மாநகர முக்கிய பகுதிகளுக்கும் செல்லும் வரும் நாட்களில் 125 வாகனம் இயக்கப்படும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரையில் வில்லாபுரம் வழியாக விமான நிலையத்துக்கு செல்லும் சாலையானது ஆட்கள் நடமாட்டம் இன்றி, வெறிச்சோடி காணப்பட்டது.
