நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டுபிராஞ்சேரியைச் சேர்ந்த செல்லத்துரை 50 ஆடுகள் வளர்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றபோது திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.

மழையை தொடர்ந்து அவர் பெட்டைக்குளம் அருகே உள்ள சுடலைமாடசுவாமி கோயிலில் ஒதுங்கியுள்ளார். ஆடுகளையும் கோயில் முன்பு நிறுத்தியுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 30 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. 5 ஆடுகள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.