பொள்ளாச்சி வனச்சரகத்தில்் ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் உருகுழிபள்ளம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி வனத்துறையினர் மற்றும் கால்நடைத்துறை மருத்துவக்குழுவினர் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்
இறந்து கிடப்பது சுமார் 46 வயதுடைய பெண் யானை எனவும், இறந்து 4 நாட்களுக்கும் மேல் ஆகிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த நிலையில்
எதுவும் சாப்பிடாமல் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.













