டில்லியிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்கள் 3 டன் மருத்துவ உபகரணங்களுடன் சென்னை பழைய விமானநிலையம் வந்தன.இரு விமானங்களிலும் 68 ஆக்ஜிசன் உற்பத்தி கருவிகள்,45 வெண்டிலேட்டா்கள்,2 லட்சம் முகக்கவசங்கள்,ஒரு லட்சம் கொரோனா பரிசோதனை RT-PCR Kits மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்திறங்கின.
அதன்பின்பு விமானப்படை வீரா்கள் கண்காணிப்பில், இந்தியன் ஏா்லைன்ஸ் லோடா்கள் மருத்துவ உபகரணங்களை இறக்கி சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் கொடுத்தனா்.அவா்கள் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.அதன்பின்பு தமிழக அரசு அதிகாரிகள் வாகனங்களில் ஏற்றி சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அடுத்த சில தினங்களில் மேலும் சில விமானங்களில் டில்லி,நாக்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்கள் பெருமளவு தமிழகம் வரவிருப்பதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.















