பஸ் நிலையமும் சந்தையும் ஒரே இடம் : தூத்துக்குடி குழப்பம்

0
534

தூத்துக்குடி புதிய பஸ் நிலயம் அருகே தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக அது வெறிச்சோடிக் கிடந்தது. நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் சந்தை திறந்தது. கூட்ட நெரிசல் காணப்பட்டது.

அதேவேளை, அருகிலேயே பஸ் நிலையத்தில் பஸ்களும் இயங்கியதால் கூட்டம் இரு மடங்காகியது . சமூக இடைவெளியின்றி மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு வந்து சென்றனர்.

இதே நிலைதான் நெல்லை டவுன் மார்க்கெட் பகுதியிலும், பாளை மார்க்கெட் பகுதியிலும், இரு மாவட்டங்களின் பல பஜார்களிலும் காணப்பட்டது. மக்கள் நெரிசலை கட்டுப்படுத்தவேண்டிய காவல்துறையினரும், மாநகராட்சி ஊழியர்களும் அந்தக் கடமையை மறந்துவிட்டனர்.

எனவே, ஊரடங்கு காலத்துக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பாகவே நேற்று இரு மாவட்டங்களில் மாநகரங்களும் நகரங்கள், பேரூர்களும் இருந்தன..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here