நகை பறித்த திருடனின் பைக்கை கவிழ்த்த பெண்

0
433




கோவை பீளமேடு அடுத்த சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி சித்திரை செல்வி(43). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் இரந்து அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகே பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் சித்திரைச் செல்வி கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது சித்திரை செல்வி சத்தம் போட்டு கத்தினார். மேலும் செயினை பறித்துச் சென்ற செல்ல முயன்ற வாலிபர் ஓட்டி வந்த பைக்கை தட்டிவிட்டார் .இதில் செயினை பறித்த நபர் பைக் தடுமாறி கீழே விழுந்தார்.

இதையடுத்து அருகில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் சித்திரை செல்வி அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தா1ர். பிறகு அவர்கள் தர்ம அடி கொடுத்து பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் பீளமேடு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் சூர்யா (25)என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here