ஒளிப்பதிவு திருத்த மசோதாவை கைவிட ஒன்றிய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

0
567

ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு கலைத்துறையினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து ஒன்றிய அரசு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ‘மாநில அரசுகளின் அதிகாரத்தை சிதைக்கும் வகையிலும், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளது. இது தொடர்பாக திரைத்துறையினர் எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். இந்த மசோதாவை கைவிடவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here