மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டியில் ரஸ் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் காப்பகம் ஒன்று இயங்கியது. இதில் அனாதை குழந்தைகளும், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்குபிறந்த குழந்தைகளும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அந்த விடுதி சிறுமி ஒருத்தி உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அப்போது அவள் உடலில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட காயங்கள் இருந்ததை கண்டுபிடித்த மருத்துவர்கள் போலீசுக்கு புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் காப்பக உரிமையாளர் பெர்லின் ஜோசப் மற்றும் வாகனஓஒட்டுநர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெர்லின் ஜோசப்பை கைது செய்தனர். தூக்க மாத்திரை கொடுத்து குழந்தைகளை பாலியல் வன்முறை செய்வதை பெர்லின் வழக்கமாக கொண்டுள்ளான் எனத்தெரியவந்துள்ளது.
இதையடுத்து காப்பகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள் அங்கிருந்த குழந்தைகளை பாதுகாப்பாக வேறு காப்பகத்துக்கு மாற்றினர்.















