நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும்,கொரோனா மூன்றாம் கட்ட அலை விரைவில் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதாலும், கருப்பு பூஞ்சை நோய்
பரவி வருவதாலும் மூன்றாம் அலையின் தாக்கம் இதைவிட அதிகரிக்கும் பட்சத்தில் அதை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக நெல்லை அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய கூடுதலாக செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் 60 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர் ஆனால், மொத்தம் 75 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் மற்றும் மூத்த பேராசிரியர்கள் நேர்முகத் தேர்வுக்கு வரும் மாணவர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் பணி அனுபவங்கள் இருந்தால் அதற்கான சான்றுகள் ஆகிய சான்றுகள் ஆராயபட்டு முழுக்க முழுக்க நேர்முக தேர்வின் அடிப்படையிலையே 75 மருத்துவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள் நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் பிற அரசு கொரனோ சிகிச்சை மையங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.













