சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கண்ணத்தேவன்புலி கிராமத்தை சேர்ந்த முருகேசன்குடும்பத்தில் மூன்று நபர்களுக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்
பட்டு மருத்துவமனையில் சிகி.ச்சை பெற்றுவருகின்றனர். இதனமுருகேசன் மகன் நிசாந்த் தனிமையில் உணவில்லாமல் தவித்துவந்தார்.
இதனை அறிந்த இளையான்குடி வட்டாட் சியர் ஆனந்த் தனது சொந்த செலவில் நிசாந்த்க்கு மூன்று வேளை உணவளிக்க ஏற்பாடு செய்தார்.மேலும்,பெற்றோரை பிரிந்து தனிமையில் வாடும் மாணவனுக்கு தன்னம்பிகை ஊட்டும் விதமாக இரவு வெகு நேரம் சிறுவனுடன் தங்கியிருந்து உரையாடினார்.













