திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலை அடிவாரத்திலுள்ள குப்பநத்தம் அணை அருகே மேற்கு ஜவ்வாது மலை உள்ள நாமக்கல் ஓடை ராட்சத நீர் வீழ்ச்சியில் திடீர் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது
தீபாவளியை முன்னிட்டு அப்பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற சுற்றுப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி திண்டாடினர்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாட்சியர் முனுசாமி தலைமையிலான வருவாய், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணி நிலைய போக்குவரத்து அலுவலர் சந்திரன் தலைமையிலான மீட்பு பணியாளர்கள் வனப்பகுதிக்கு விரைந்து சென்று அனைவரையும் பாதுகாப்புடன் மீட்டார்கள்.














