இலவச தடுப்பூசி போட்டவர் எடப்பாடி: முன்.அமைச்சர் உதயகுமார்

0
689

திருமங்கலம் தொகுதி உள்ள செக்கானூரணியில் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

தற்போது தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது ஆனால் திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது ஆகவே மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும்

சுகாதாரத்துறை அமைச்சர்தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது என்ற கணக்கை காட்டுவதை காட்டிலும் இன்னும் எத்தனை பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் எனற கருத்தை கருத்தில் கொள்ள வேண்டும்

இந்தியாவிலே தடுப்பூசி கண்டுபிடிக்காத காலத்திலேயே, தடுப்பூசி மருந்து கண்டுபிடித்தவுடன் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசிபோடப்படும் என்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதேபோல் செயல்படுத்தியும் காட்டினர்.

ஆனால் அதே காலகட்டத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் தடுப்பூசி தொடர்பாக ஐயப்பாடான அறிக்கையை ஏற்படுத்தி அதில் குழப்பம் ஏற்படுத்தினார்.

ஆனால் அதற்கு அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு போதிய விழிப்புணர்வை வழங்கினார் என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here