இன்றும் நாளையும் கடை அப்புறம் முழுத்தடை

0
1189

தமிழ்நாட்டில் கொரோனா ஏறுமுகமாக இருப்பதால் இன்னும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளது. இன்றும் நாளையும் எல்லாக் கடைகளும் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். வழக்கமான ஞாயிறு முழு ஊரடங்கு நாளை இல்லை. அதேவேளை டாஸ்மாக் நாளை திறக்கப்படாது. நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு தளர்வுகளின்றி நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வீடுகளுக்கு கொண்டுவரப்படும். திருமணம், இறப்புக்கு தகுந்த காரணங்களுடன் இ பதிவு மூலம் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கலாம். இன்றும் நாளையும் நரசு மற்றும் தனியார் பேருந்து இயங்கும். வெளியூரில் இன்னும் இருப்பவர்கள் ஊருக்கு வர முடியும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இருக்கிறது. உணவகங்கள் காலை, மதியம், மாலை 3 முறைகளாக பார்சல் வழங்கலாம். மருந்தகம், பால், பத்திரிகை பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பெட்ரோல் பங்க் வழக்கம்போல் இயங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here