திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே பெங்களூர் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் வயது-60 என்பவர் ரூபாய் 3 லட்சம் பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றார்.
மருத்துவமனை வளாகத்தில் இருந்து அவரை பின்தொடர்ந்தது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பட்டப்பகலில் ரூபாய் 3 லட்சம் பணத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் அவரிடமிருந்து பறித்து சென்றனர்.
மக்கள் நடமாட்டம் இருந்த சூழலில் நடந்த இந்த பகல் கொள்ளை சம்பவம் ம பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இதனை தொடர்ந்து செங்கம் காவல் நிலையத்தில் பணத்தை பறி கொடுத்த ஒய்வு பெற்ற மருத்துவ பணியாளர் தகவல் அளித்தார்.
மேலும் இந்த தகவலின் அடிப்படையில் மர்ம நபர்களை கண்டறிய மருத்துவமனை, வங்கி மற்றும் சாலையில் உள்ள வணிகங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் மர்ம நபர்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொண்டார்கள்.













