கால்வாயில் மூழ்கி மூன்று வாலிபர்கள் பலி

0
948

மதுரை, முனிச்சாலை ரோடு ருக்மணிபாளையத்தைச் சேர்ந்தவர் ராமு; இரும்பு கடை வைத்துள்ளார். இவரது மகன் கோபி (19) பிளஸ் 2 முடித்து, தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். இன்னொரு மகன் கிஷோர் (18) பிளஸ் 2 முடித்துள்ளார்.இவர்களது நண்பர்கள் ஹரிஹரன் (17), சூர்யகுமார் (15). இவர்கள் உட்பட எட்டு பேர், நேற்று மாலை ஒத்தக்கடை அருகேயுள்ள துக்கலப்பட்டி பெரியாறு பாசன கால்வாய்க்கு குளிக்க சென்றனர். மாலை 4 மணிக்கு மின் திட்ட பணிக்காக கால்வாய் அமைக்கப்பட்ட பகுதியில் குளித்தபோது நான்கு பேரும் நீரில் மூழ்கினர். நண்பர்கள், போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலுார் தீயணைப்பு வீரர்கள், ஒத்தக்கடை போலீசாருடன் அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.ஆபத்தான நிலையில் சூர்யகுமாரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். கோபி, கிஷோர், ஹரிஹரன் ஆகியோரை சடலமாக மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here