திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தலைமைச் செயலாளர் முதல் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பணி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் . போலீஸ் கமிஷனர் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்படும்போது ஒரே மண்டலத்திற்கு உள்ளேயே மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
முதல்முறையாக கோவை மாநகர் மற்றும் புறநகர் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்த பெரும்பாலான இன்ஸ்பெக்டர்கள் மேற்கு மண்டலத்தில் இருந்து தெற்கு மற்றும் மத்திய மண்டல போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள துடியலூர் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் ,கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பேரூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சூலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஆலந்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் விஜயன், நெகமம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன், குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவர்மன், ஆர்எஸ் புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, போத்தனூர் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராபி சுஜின் ஜோஸ், கோவை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தென் மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பெரும்பாலான இன்ஸ்பெக்டர்கள் கோவை நகரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.