ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி ஆறு, குளங்களில் மணல் கொள்ளை

0
630

நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஸ்ரீவை. புதுக்குடி எம்.எஸ்.ராஜா தூத்துக்குடி ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘ பராங்குசநல்லூர் ஆற்றுப்பகுதியிலும், ஸ்ரீமூலக்கரை அருகே புளியங்குளத்திலும் சட்டவிரோதமாக மணல் திருடப்படுகிறது. திருப்புளியங்குடி விளைநிலத்தில் அனுமதியின்றி அள்ளுகின்றனர்.
ஸ்ரீவை _ ஆழ்வை ஆற்றின் வட பகுதியில் செங்கல் சூளையின் பின்புறமும் மணல் எடுக்கிறார்கள். திருச்செந்தூர் பகுதியில் தாங்கை, கடம்பா நந்தன்குளத்திலும் மராமத்து என்ற பெயரில், விவசாயிகளுக்கு கொடுக்கும் பெர்மிட்டை பயன்படுத்தி மணலை அனல் மின் நிலைய பணிகளுக்கு கொண்டுசெல்கின்றனர். இதை தடுத்து நிறுத்தவேண்டும்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here