அமைச்சர் ராஜேந்திரபாலாஜி படத்துக்கு செருப்படி

0
1256

நேற்று முன்தினம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முகாமிட்டுபிரசாரம் செய்தார். அப்போது அதிமுக பிரமுகர் ஒருவர் கேசவநேரி ஜமாத் நிர்வாகிகளை அமைச்சரிடம் அழைத்துவந்தார். அமைச்சரிடம் அந்த பகுதியில் நியாயவிலை கடை அமைப்பது தொடர்பாக ஜமாத் நிர்வாகிகள் கோர்க்கை மனு அளித்தனர்.
அவர்களிடம், ‘ தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் கோரிக்கையை ஏன் நிறைவேற்ற வேண்டும்?’ எனக்கேட்டதோடு, மிரட்டலாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் பரவியது. இன்று காலை மதுரை கிழக்கு வாசலில் கூடிய எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, ராஜேந்திர பாலாஜி படத்தை செருப்பால் அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
(முகப்பில் காணொளி காண்க)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here