8 போலீசாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துப்பே, மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் .அவரை நீதிமன்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்திரப் பிரதேசத்திற்கு போலீசார் கொண்டுவந்தனர். வழியில் கான்பூர் பகுதியில் போலீஸ் வேன் கவிழ்ந்த தாகவும் , விகாஸ் துபே தப்பி ஓட முயன்றதாகவும், இதனால் தாங்கள் சுட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சுடப்பட்ட விகாஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக போலீசார் கூறினாலும், அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது உறுதியாகிறது.












