தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இடைச்சிவிலை பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அப்போது டிஎஸ்பி ஹார்ட் அட்டாக் எவ்வாறு ஏற்படுகிறது? அதனை எவ்வாறு தவிர்க்கலாம்? என்ற தலைப்பில் சின்சியராக பேசிக் கொண்டிருந்தார். அப்போது டிஎஸ்பி பேசிக் கொண்டிருக்கும் போது சேட்டை செய்த அவரது மகனை அவர் தடுத்தார். அப்போது தந்தையின் கையில் அவரது மகன் லேசாக அடித்தார். தொடர்ந்து ஹார்ட் அட்டாக்கால் கான்ஸ்டபிள் ஒருவர் இறந்தார் என டிஎஸ்பி பேசிய போது அவரது மகன் திடீரென “ஷாக்” ஆகி அவரது தந்தை டிஎஸ்பிஐ உற்று நோக்கினான். தொடர்ந்து டிஎஸ்பி பேசிக் கொண்டிருக்கையில் அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கேனை எடுத்து அவரது மகன் சுட்டித்தனமாக விளையாடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த டிஎஸ்பி தனது செல்போனை எடுத்து பார்த்த போது தனது தந்தை டிஎஸ்பியிடம் இருந்து அந்த செல்போனை மகன் பிடுங்கினான். பின்னர் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரது தந்தையை பார்த்து டிஎஸ்பியின் மகன் சுட்டித்தனமாக கைநீட்டி திட்டினான். இந்த நிகழ்வுகள் அங்கிருந்து அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த டிஎஸ்பியின் மகனுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்.
Home மாவட்டம் தூத்துக்குடி ஹார்ட் அட்டாக் குறித்து சின்சியராக பேசிய டிஎஸ்பியிடம் சேட்டையில் ஈடுபட்ட டிஎஸ்பியின் சுட்டி மகன்…!